×

அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் எதிர்பாராமல் உயிரிழப்போருக்கு ஒரே மாதிரியான இழப்பீடு

சென்னை: எதிர்பாராதவிதமாக உயிரிழப்போர் அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீட்டை உடனுக்குடன் தமிழக அரசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச் சாராயம் உட் கொண்டு 22க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ₹50,000மும் அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் தவறு ஒன்றுமில்லை. அதே சமயத்தில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாகவும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதன் காரணமாகவும், கட்டடம் இடிந்து விழுவதன் காரணமாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹3 லட்சமும்.

சாலை விபத்துகள் , நீரில் மூழ்கி, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம் தான் அரசு நிவாரணமாக வழங்குகிறது. ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை. உயிர் என்பது விலை மதிப்பற்றது என்பதால், நிவாரண உதவி வழங்குவதிலே பாரபட்சம் காட்டுவது ஏற்புடையதல்ல. நிவாரண உதவியினை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் எதிர்பாராமல் உயிரிழப்போருக்கு ஒரே மாதிரியான இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,Former ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...