×

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்இடஒதுக்கீடு அடிப்படையிலான கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு

சென்னை: கால்நடை இளநிலை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சிறப்பு பிரிவு மாணவர்களுகாக கலந்தாய்வு நடைபெற்றது. இன்றைய தினம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% உள்இடஒதுக்கீடு அடிப்படையிலான இடங்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருக்க கூடிய கால்நடை மருத்துவகல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. குறிப்பாக கால்நடை மருத்துவபடிப்புகான இளநிலை மருத்துவப்படிக்கான இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளுக்காக மொத்தம் 692 இடங்கள் உள்ளது. இவற்றில் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 600 இடங்களும், உணவு தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 92 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பபடுகின்றன.

குறிப்பிட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய கால்நடை மருத்துவகல்லூரி 7 கல்லூரிகள் மேலும் மொத்தமுள்ள 9 கல்லூரிகளில் உள்ள இடங்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யபடுகின்றன. தற்போது நடைபெற்று வரகூடிய அரசு பள்ளி மாணவர்களுகான உள்ஒதுக்கீட்டில் மொத்தம் 52 இடங்கள் நிரப்பபடவுள்ளது.இவற்றில் பங்கேற்பதற்காக 176 மாணவ, மாணவிகள் அழைக்கபட்டுள்ளனர். தற்போது இந்த கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து அவர்களுக்கான சேர்க்கை ஆணையும், இன்றே வழங்கப்படவுள்ளது.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்இடஒதுக்கீடு அடிப்படையிலான கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...