×

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டு படிப்பில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்: கல்லூரி கல்வி இயக்கம் தகவல்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருந்துவம் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்து படிக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த மே 8-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டு படிப்பில் சேர 3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. 1,07,395 இளநிலை பட்டப்படிப்பு இடங்களில் சேர மே 8 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மே 19-ம் தத்தி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று மாலை வரை 2,99,558 விண்ணப்பபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை 2,44,104 ஆகும், இதில் மாணவர்கள் 1,15,752 பேரும், மாணவிகள் 1,28,274 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசை பட்டியல் மே25-ல் வெளியிடபடும் என்றும் மே 29ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்கும் என்றும் கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும், ஜூன் 2-ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 26-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டு படிப்பில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்: கல்லூரி கல்வி இயக்கம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...