×

ஆளுநர் ஆர்.என். ரவி பிறந்த நாள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று 71-வது பிறந்தநாள். இந்நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட ஆயுளுடனும் நிறைவான ஆரோக்கியத்துடனும் தேசப் பணி தொடர, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ஆளுநர் ஆர்.என். ரவி பிறந்த நாள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Governor R.N. Ravi ,Tamil Nadu ,Chief Minister Stalin ,Chennai ,Governor RN Ravi ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...