×

அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒரு அமைச்சரை அமைச்சரவையில் சேர்ப்பதற்கோ அவரை நீக்குவதற்கோ முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது. அரசியல் அமைப்பின் சட்டப்படி ஆளுநரின் நிலை தவறு என்பதை விளக்கி முதலமைச்சர் கடிதம் எழுத உள்ளார். யாருடைய அறிவுரையையும் கேட்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுத்துள்ளார் ஆளுநர். ஆளுநர் தனது விருப்புரிமை அடிப்படையில் யாரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது. ஆளுநரின் நடவடிக்கையை நிராகரிக்கிறோம். முதலமைச்சருக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஆளுநர் மீறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவதுபோல் ஆளுநர் செயல்படுகிறார் எனவும் விமர்சனம் செய்தார்.

 

The post அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,South States ,Chennai ,Minister Gold ,South India ,South East ,
× RELATED துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து