×

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்: அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் மூலமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் சுகாதார மேம்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு அதிக செலவு செய்யும் நிலையில் விதிகளுக்கு முரணாக மருத்துவர்கள் செயல்படுகின்றனர் எனவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கருப்பையை அகற்றியதாகவும் சின்னமலூரைச் சேர்ந்த சுமதி என்பவர் அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட பெண் சுமதிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்: அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்