×

அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பிரிவான தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் சரிபார்ப்பகம் கூறியதாவது;

அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை(ஏப்ரல்) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதைத் திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது. அக்கோரிக்கையை ஏற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது’ என்று பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

The post அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...