×

நெல்லிக்காய் மோர்க்குழம்பு

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 6
அரிசி – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
துருவிய தேங்காய் – 1/2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 6
புளிக்காத கெட்டித்தயிர் – 1.5 கப்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – சிறிதளவு
வரமிளகாய் – 4
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப.

செய்முறை:

துவரம் பருப்பு மற்றும் அரிசியை 25 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இதோடு துருவிய தேங்காய், இஞ்சி, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் உப்பு, மஞ்சள் பொடி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். இந்த விழுதுடன் நெல்லிக்காயை வேகவைத்து, விதைகளை நீக்கி கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தற்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை ஒரு கடாயில் மாற்றி மிக்சி கழுவிய நீரையும் ஊற்றி சூடாக்கவும். லேசாக கொதி வரத் தொடங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவேண்டும். அடுத்ததாக சிறிய கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதில் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து தாளிக்கவும். தாளிப்பை மோர்க்குழம்பில் சேர்த்து ஒருமுறை கிளறி விடவும். இதனை சற்று கூடுதல் சுவைக்காக தாளிக்கும்போது சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.

The post நெல்லிக்காய் மோர்க்குழம்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்