×

7 நாட்களுக்கு பின் தங்கம் விலை தொடர் சரிவு.. ஒரு சவரன் ரூ. 800 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில், இன்று சரிவை கண்டுள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை கடந்த வாரம் அதிரடியாக குறைந்தது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 வரை குறைந்தது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. 18ம் தேதி அன்று தங்கம் விலை சவரன் ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,960க்கு விற்பனையானது. 19ம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,520க்கும், 20ம் தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,920 ஆகவும், 21ம் தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,160 ஆகவும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்கப்பட்டது. அதே போல் 23ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,400க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 6 நாட்களில் தங்கம் விலை ரூ.2,920 உயர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக சரிவை கண்டுள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,200க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்கப்படுகிறது. வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் நகை விலை உயர்வதும் குறைவதுமாக இருப்பது பெற்றோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post 7 நாட்களுக்கு பின் தங்கம் விலை தொடர் சரிவு.. ஒரு சவரன் ரூ. 800 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...