×

கோ பர்ஸ்ட் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுமா?

புதுடெல்லி: கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கோ பர்ஸ்ட் திவால் தீர்வு நடவடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தாமாக முன்வந்து விண்ணப்பித்தது. இதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் திவால் தீர்வு நடவடிக்கையை தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் ஏற்று கொண்டது. இந்நிலையில், நிறுவனத்தை சீரமைப்பு செய்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான திட்டத்தை தயாரித்து 30 நாட்களுக்குள் தயார் செய்து சமர்ப்பிக்கும்படி அந்த நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

The post கோ பர்ஸ்ட் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : go burst ,New Delhi ,GoBurst Airport ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...