×

பொது சிவில் சட்ட விவகாரம்; வரைவு மசோதாவை தாக்கல் செய்யுங்கள்!: ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: ெபாது சிவில் சட்ட விவகாரத்தால் வரைவு மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த நேரத்தில் இந்த சட்டம் கொண்டு வரவேண்டியதில்லை என்றும் காங்கிரஸ் ெதரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூர் வன்முறை, மல்யுத்த வீரர்களின் போராட்டம், பணவீக்கம், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பொது சிவில் சட்டம், மாநில ஆளுநர்களின் அத்துமீறல்கள் ஆகிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பொது சிவில் சட்டம் கொண்டு வருதல் தொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதியே நாங்கள் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம். அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்த காலகட்டத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதல் சரியாக இருக்காது. இந்த விவகாரத்தில் வரைவு மசோதாவோ, அறிக்கையோ வெளியிட்டால் மட்டுமே எந்த கருத்தையும் கூற முடியும். வரைவு மசோதா குறித்து விவாதம் நடக்கும் போது, ​​நாங்கள் அதில் கலந்து கொண்டு முன்மொழியப்பட்ட கருத்துகளை மதிப்பாய்வு செய்வோம். தற்போதைய நிலையில், ​​சட்ட ஆணையத்தின் பொது நோட்டீசுக்கு மட்டுமே பதில் அளிக்க முடியும். ெபாது சிவில் சட்டம் குறித்து புதியதாக பொதுக் கருத்தை கேட்கும் சட்ட ஆணையத்தின் முயற்சியானது, மோடி அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும். டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்ட விவகாரத்தில், மசோதாவை அறிமுகப்படுத்திய பிறகு அதுகுறித்து காங்கிரஸ் பதிலளிக்கும்’ என்றார்.

The post பொது சிவில் சட்ட விவகாரம்; வரைவு மசோதாவை தாக்கல் செய்யுங்கள்!: ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,New Delhi ,Government of the Union ,Zepad ,Congress ,Dinakaran ,
× RELATED குடியரசு தலைவர் வாசித்தது ஒன்றிய அரசு...