×

காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி.! 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜெருசலேம்: கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 100 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழித்து கட்டுவோம் என இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 100 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் ஏராள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை தெரிந்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

The post காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி.! 50க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Gaza's Taraj district ,Jerusalem ,Taraj district ,eastern Gaza ,Israel ,Hamas ,Gaza Strip ,Palestine ,Dinakaran ,
× RELATED லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின்...