×

அடுத்த காஸாவாக காஷ்மீர் இருக்கக்கூடும்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேச்சால் பரபரப்பு

டெல்லி: அடுத்த காஸாவாக காஷ்மீர் இருக்கக்கூடும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை அழிக்கப் போவதாக கூறிக் கொண்டு பாலஸ்தீனர் வாழும் காஸா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 20,000 பேருக்கு மேல் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேசிய மாநாட்டு எம்பி பரூக் அப்துல்லா, காஸா மீது இஸ்ரேல் நடத்தும் குண்டுவீச்சுடன் காஷ்மீரை ஒப்பிட்டு பேசி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, நமது நண்பர்களை மாற்றலாம் ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியிருந்தார். அண்டை வீட்டாரோடு நட்பாக இருந்தால் இருவரும் முன்னேறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் போர் என்பது இப்போது ஒரு விருப்பமல்ல என்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை தொடர வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். தற்போது, நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார்.

நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என்று சொல்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானுடன் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பேச்சு நடத்த முன்வராததை பரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்படும் காசா மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும் என பரூக் அப்துல்லா தெரிவித்தார். எனவே இருதரப்பு பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களையும் பரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.

The post அடுத்த காஸாவாக காஷ்மீர் இருக்கக்கூடும்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Gaza ,Jammu and Kashmir ,chief minister ,Baruch Abdullah ,Delhi ,Hamas ,Farooq Abdullah ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...