×

தோல்வி பயத்தால் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

டெல்லி: தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த போதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படமால் இருந்து வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிடர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் விலை குறைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் பொது செயலாளர் கூறியதாவது; தோல்வி பயத்தால் சமையல் எரிவாயு விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார். கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைய சிலிண்டர் விலையேற்றமே முக்கிய காரணம்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டரை வழங்கி வருகிறது. பாஜக நிர்வாக சீர்கேட்டால் துன்பப்பட்ட மக்கள் ராஜஸ்தான் அரசின் திட்டத்தால் நிம்மதி அடைந்துள்ளனர். 3 மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் தோல்வியை எதிர்நோக்கியுள்ளது பாஜக எனவும் கூறியுள்ளார்.

 

The post தோல்வி பயத்தால் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்! appeared first on Dinakaran.

Tags : Congress ,Jairam Ramesh ,Delhi ,Jairam ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED கிண்டலடித்த தன்கர் டென்ஷனான கார்கே: வெடித்தது வார்த்தை போர்