×

கந்தர்வகோட்டை பகுதியில் கரும்பு பயிருக்கு பார் கட்டும் பணி தீவிரம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் தற்சமயம் பரவலாக மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திர தாக்குதலில் இருந்து மக்கள் பாதிக்காத வண்ணம் தட்பவெட்ப நிலை உள்ளது. இந்நிலையில் தற்சமயம் பெய்த மழையின் ஈரத்தில் விவசாயிகள் பயிர் செய்துள்ள கடலை, நெல் நாற்றுக்கு களை பறித்து வருகிறார்கள்.

மேலும் விவசாயிகள் பயிர் செய்திருந்த நடவு கரும்பு விளைந்து வரும் வேலையில் அது சாயாத நிலையில் கரும்பு வளர்ச்சி பெற பயிர் ஓரங்களில் மண் சேர்க்கும் வேலை நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் கூறும் போது, கரும்பு பயிருக்கு பார் போடுவதால் கரும்பு சாயாமல் நேராக உயரமாக வளரும். இதனால் நீர்ப்பாய்ச்ச சுலபமாக இருக்கும். கரும்பு பயிர்களுக்கு தேவையற்ற களை வளராமல் இருக்கும். மேலும் மருந்து தெளிக்கவும், தோகை உறிக்கவும் சுலபமாக இருக்கும். கரும்பு சாயாமல் உயரமாக வளர்ந்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்றனர்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் கரும்பு பயிருக்கு பார் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Gandharvakottai ,Kandarvakottai ,Pudukottai District ,Kandarvakottai Panchayat Union ,
× RELATED கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் அழைப்பு