×

நிதியுதவி நிகழ்ச்சியில் சோகம் ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி

சனா: ஏமனில் நிதியுதவி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாயினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏமன் தலைநகர் சனாவில் நிதியுதவி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் ஒரு இடத்தில் கூடினர்.கூட்டத்தை கட்டுப்படுத்த ஹவுத்தி கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கி குண்டு மின்சார வயரில் பட்டதில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அஞ்சிய பொதுமக்கள் சிதறி ஓடினர்.

இதில் பலரும் கீழே விழுந்ததால் நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். 73 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் ஆவர். ஏமனில் அரசு படைகளுக்கும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா அரசு செயல்படுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

The post நிதியுதவி நிகழ்ச்சியில் சோகம் ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Yemen ,Sanaa ,Ramzan festival ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்