×

செல்வழிமங்கலம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: செல்வழிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், செல்வழிமங்கலம் ஊராட்சி மன்றம், சவிதா மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் நேஷனல் ஆல்ட்ரஸ் அறக்கட்டளையின் சார்பில், இலவச மருத்துவ முகாம் செல்வழிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜம்போடை சங்கர் தலைமை வகித்தார்.

துணை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் சரிதா அருண்குமார், மோகனசுந்தரம், ஆதிமூலம், சத்யா நீலகண்டன், பிரியா ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில், சவிதா மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு சிகிச்சை, குழந்தைகள் நலம், பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கபட்டது. இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

The post செல்வழிமங்கலம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Free Medical Camp ,Selvazhimangalam Panchayat ,Sriperumbudur ,Selvazhimangalam Panchayat Council ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அரசு...