×

பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை: சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா நாட்டுப் பயணிகள் விசா இன்றி சீனா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை: சீனா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : France, Germany ,China ,Beijing ,France ,France, ,Germany ,Dinakaran ,
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு