×
Saravana Stores

வெளிநாட்டில் மருத்துவம் படித்தாலும் உதவித்தொகை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வெளிநாட்டு மருத்துவம் படித்த மாணவர்களை வித்தியாசமாக நடத்த முடியாது. இந்தியக் கல்லூரிகளில் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகளில் படித்து விட்டு வந்து இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் இன்டர்ன்ஷிப்பின் போது உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஜித் எஸ்.எல் உட்பட வெளிநாட்டில் மருத்துவம் படித்த 5 மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பிரசன்னா பாலச்சந்திர வரலே அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,’ வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது மிக முக்கியமானது. இதை மறுக்கும் கல்லூரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நமது நாட்டில் எம்பிபிஎஸ் படித்த மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை மருத்துவக் கல்லூரிகள் வித்தியாசமாக நடத்த முடியாது. வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை இந்திய கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு இணையாக நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

The post வெளிநாட்டில் மருத்துவம் படித்தாலும் உதவித்தொகை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Indian ,India ,Dinakaran ,
× RELATED கண்கள் கட்டப்படாத, கையில் வாள் இல்லாத...