×

இலங்கை அதிபருடன் வெளியுறவு அமைச்சர் சந்திப்பின்போது ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம், மீனவர் பிரச்னை தீர்வு குறித்து வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ் அறிவுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையின் புதிய அதிபராக அநுரா குமார திசநாயக பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4ம் தேதி இலங்கை செல்கிறார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும் இலங்கை அதிபரை வலியுறுத்த வேண்டும்.

The post இலங்கை அதிபருடன் வெளியுறவு அமைச்சர் சந்திப்பின்போது ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம், மீனவர் பிரச்னை தீர்வு குறித்து வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sri Lanka ,Ramadas ,Chennai ,Palamaka ,Foreign Minister ,Jaisankar ,Anuura Kumara Dissanayak ,President ,Ramdas ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படையினர் கைது செய்த...