×

வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு தனி முகாம்: அமைச்சர் தகவல்

ஏழாயிரம்பண்ணை: ‘மழை வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தனி முகாம்கள் நடத்தப்பட்டு உடனடியாக வழங்கப்படும்’ என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார். வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோக விடுபட்ட சேதமடைந்த விவசாய பகுதிகள் இருந்தால் மனுக்களாக கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கி, அடித்து செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் சான்றிதழ் மற்றும் பொதுமக்களின் அனைத்துவித சான்றிதழ்களும் அந்தந்த பகுதிகளில் தனி முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக உடனடியாக கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்து தரப்படும். இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்பட்ட இழப்பிற்கு அரசு கூறிய நிவாரணம் நிச்சயமாக அனைவருக்கும் வழங்கப்படும்’’ என்றார்.

The post வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு தனி முகாம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,Dinakaran ,
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...