×

பளிச்…பளீர்… பிளீட்ஸ்கள்!

என்று துவங்கிய ஃபேஷன் என்றே தெரியாத அளவிற்கு இந்த மடிப்புகளுக்கு எக்காலத்திலும் மவுசு அதிகம். அழுத்தி மடித்து, கோர்வையாக சேர்த்த துணிகள் அக்காலம் முதல் இக்காலம் வரையிலும் தனக்கென தனி அந்தஸ்தும், பிரபலமுமாக விதவிதமான டிசைன்களில், வண்ணங்களில், உடைகளில் என இந்த மடிப்புகள் மாஸ் காட்டிக்கொண்டிருக்கின்றனர். எப்படி இந்த ப்ளீட்ஸ்களுக்கு இப்போதும் இவ்வளவு மவுசு, கேட்டவுடன் புன்னகை மலர பேசத் துவங்கினார் டிசைனர் மற்றும் ஃபேஷன் ஆய்வாளர் நந்தா.

‘ஒரு நிறமோ, பல நிறங்களோ, விதவிதமான டிசைன்களோ, எதுவானாலும் இந்த ப்ளீட்ஸ் மெட்டீரியல்களில் என்ன உடை டிசைன் செய்தாலும் நீங்கதான் குயின். ஸ்கர்ட், பலாஸோ, பெரிய கவுன், மிடி கவுன், டாப், கிராப் பேண்ட், குர்தா ஏன் ஓரிரண்டு வருடங்களா இந்த ப்ளீட்ஸ் அல்லது கிரஷ் மெட்டீரியல்களில் புடவைகள் கூட பார்க்க முடிகிறது. அதிலும் பளிச் கலர்களில் தீபிகா படுகோன் அணிந்திருந்த புடவை இன்னைக்கும் டிரெண்ட். சில உடைகளுக்கு ஏத்த மாதிரி ப்ளீட்ஸ் அமைப்புகளும், தைக்கும் முறையும்கூட மாறுபடும்’ எத்தனை விதமான ப்ளீட்ஸ்கள் உள்ளன தொடர்ந்தார் நந்தா.

பாக்ஸ் ப்ளீட்ஸ்கள்(Box Pleats): ஃபார்மல் உடைகள், யூனிஃபார்ம்களில் இடம்பெறும் ப்ளீட்ஸ்கள் இந்த பாக்ஸ் ப்ளீட்ஸ்கள். டிரவுசர்கள், யூனிஃபார்ம் ஸ்கர்ட்கள் என கிட்டத்தட்ட அட்டைப் பெட்டி மாதிரி அப்படியே இந்த பாக்ஸ் ப்ளீட்ஸ்கள் சீராக நிற்கும். சூரியக்கதிர் ப்ளீட்ஸ் (Sunburst Pleats): கிட்டத்தட்ட சூரியக் கதிர் எப்படி வானிலிருந்து பாயுமோ அப்படியான தோற்றம் கொடுப்பவை. இவைகள்தான் பொதுவாக பளிச் நிறத்தில், பளபள சாட்டின் துணிகளில் அல்லது லேஸ் துணிகளில் என ஸ்கர்ட்டுகளில் பார்க்கலாம்.

கத்தி ப்ளீட்ஸ்(Knife Pleats) : இவைகளும் யூனிஃபார்ம் அல்லது ஃபார்மல் உடைகளில் பயன்படுத்தப்படும் நேரான ப்ளீட்ஸ்கள்தான். நம் இந்தியப் பள்ளிகளின் யூனிஃபார்ம் ஸ்கர்ட்களில் இந்த ப்ளீட்ஸ்களை பார்க்கலாம். உள்பக்கமான ப்ளீட்ஸ் (Inverted Pleats): பாக்ஸ் ப்ளீட்ஸ்களுக்கு அப்படியே நேர் எதிர்வகையான உட்பக்க மடிப்புக்கொண்ட ப்ளீட்ஸ்கள் இவை. இந்த வகை பொதுவாக கத scissor pleatsவு, ஜன்னல் திரைச்சீலைகள், ஸ்க்ரீன்களில் பார்க்கலாம்.
கத்தரி ப்ளீட்ஸ்(Scissor Pleats: கிட்டத்தட்ட கத்தரிக்கோலை வெட்டு வதற்கு விரித்தால் எப்படி இருக்குமோ அப்படியான தோற்றம் கொடுப்பவை இந்த கத்தரி ப்ளீட்ஸ்கலவையான ப்ளீட்ஸ் (Mixed Pleats); ஒன்று அல்லது அதற்கு மேலான ப்ளீட்ஸ்களை தேவைக்கேற்ப உடைகளில் சேர்த்து கலந்து ஆடைகள் டிசைன் செய்வது.

எப்படி இதற்கு வண்ணங்கள், வடிவங்கள் , நிறங்கள் கொடுப்படுகின்றன தொடர்ந்தார் நந்தாப்லீட்ஸ்களை பொறுத்தமட்டில் வண்ணங்கள், டிசைன்களை அப்படியே பிரிண்ட் செய்யக்கூடாது, முடியாது. ஒவ்வொரு மடிப்பிற்கும் ஒரு தனித்துவம் இருப்பதால், அந்த மடிப்புகளின் போக்கில்தான் டிசைன்கள், பிரிண்ட்கள், அச்சுகள், அல்லது நிற டைகள் பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு கோடுகள் கொண்ட ப்ளீட்ஸ் மெட்டீரியல்கள் எனில் மடிப்புகளின் போக்கில்தான் கோடுகள் டிசைன்களை பிரிண்ட் செய்ய வேண்டும். பொதுவாகவே ப்ளீட்ஸ் உடைகள் என்றாலே , மகிழ்ச்சி, ஜாய், என் ஜாய் போன்ற உணர்வுகளை வெளிப்படும் வகையறாக்கள்தான். எனவேதான் போரடிக்கும் ஸ்கூல் யூனிஃபார்ம்களானாலும் இந்த மடிப்புகள் கொண்டு மெனக்கெட்டு தைப்பதுண்டு. ஒரு நிறமோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பல நிறங்கள் ஒன்றிணைத்து கிட்டத்தட்ட வானவில் எப்படி கூர்மையாக ஆரம்பித்து விரிந்து செல்லுமோ அப்படியான தோற்றத்தில்தான் இந்த ப்ளீட்ஸ்களில் வண்ணங்கள் டை சேர்ப்பார்கள். அதிகம் வண்ணங்கள் நிறங்கள் வடிவங்கள் என எந்த கட்டுப்பாடுகளும் இன்றி விதவிதமான வகைகளில் இந்த துணிகள் உருவாக்கப்படும். பெண்களுக்கான உடைகளில் மட்டுமின்றி ஆண்களின் பார்மல் பேன்ட்கள், அதில் வரும் மடிப்புகள், டிரவுசர்களில் மடிப்புகள், வீடுகளில் மாட்டப்படும் திரைச்சீலைகள், அலுவலகங்களில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன்கள் என நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் விதவிதமான வகைகளில் இந்த ப்ளீட்ஸ்கள் நம்முடனேயே பல வருடங்களாக பயணிக்கின்றன’ எப்படி அணியலாம், என்னென்ன உடைகளில் ப்ளீட்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

‘ நாம் பயன்படுத்துகிற ஹேண்ட் பேக் சுருக்கங்கள் துவங்கி, அத்தனையிலும் ஏதோ ஒரு வகையில் இந்த மடிப்புகள் இருக்கும். சில வகைகள் மெட்டீரியல்களே உருவாக்கும்போது மடிப்புகளாக அழுத்தப்பட்டு வரும். சில மடிப்புகள் டிசைனர்களின் திறமையைப் பொறுத்துதான் டிசைன் செய்யப்படும். தையல் கலையில் மிக முக்கியமான பயிற்சி இந்த மடிப்புகள் தைக்கும் முறைக்குத்தான் கொடுப்பார்கள். காரணம் தினமும் அணிந்துகொள்ளும் நைட்டியின் ஃபிரில்கள் முதல், தலையணை உறைகளில் கூட இந்த மடிப்புகளைக் காணலாம். ப்ளீட்ஸ்கள் பொருத்தவரை சில வகை நாம் கைகளிலேயே புடவை கொசுவம், முந்தி, துப்பட்டாக்களில் வைத்து பின் குத்திக்கொள்ளும்படி வரும். சில வகைகள் டிசைனர்களின் கைவண்ணத்தில் தைக்கப்படும். பொதுவாக இந்த ப்ளீட்ஸ்களில் ஸ்கர்ட்கள் அதிகம் டிசைன் செய்துக்கறாங்க. இப்படித்தான் பயன்படுத்தணும்ன்னு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாம இத்தனை காலமும் நம்ம கூடவே இருக்கும் டிரெண்ட் இந்த ப்ளீட்ஸ்கள்.
– ஷாலினி நியூட்டன்

The post பளிச்…பளீர்… பிளீட்ஸ்கள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!