×

மாமல்லபுரத்தில் மீனவர்கள் வலையில் சிக்கும் பலாசி மீன்கள்: எதற்கும் பயன்படாது என மீனவர்கள் கவலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மீனவர்கள் வலையில் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்குகின்றன. இது எதற்கும் பயன்படாது என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் மீனவர் குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின், பிரதான தொழில் மீன் பிடித்தல். மாமல்லபுரம் மற்றும் அருகில் உள்ள மீனவ குப்பங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் மீனவர்கள் வலையில் உணவுக்கு பயன்படுத்த முடியாத பாலாசி மீன்கள் அதிகளவில் வலையில் சிக்குகிறது.

இந்த, பாலாசி மீனை உணவுக்கு பயன்படுத்த முடியாது. இவை வலையில் சிக்குவதால் வலைகள் கிழிவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த மீன்களை விற்பனை செய்ய முடியாது. இதனால், வலையில் சிக்கும் மீன்களை எடுத்து, மீனவர்கள் கரையில் வீசுகின்றனர். இந்த மீனின் உடலின் வெளியில் இருக்கும் கூர்மையான முட்கள் மிகவும் விஷத்தன்மை கொண்டது. மேலும், கடற்கரையில் விஷத்தன்மை கொண்ட பாலாசி மீன்களை வீசுவதால், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், காலை மற்றும் மாலையில் நடை பயிற்சியில் ஈடுபடும் உள்ளூர் மக்களுக்கும் காலில் மீன் முள் குத்தி காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது,

எனவே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மீனவர்கள் போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘கடந்த 2 நாட்கள் மாமல்லபுரம் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வலையில் விற்பனை செய்ய முடியாத பாலாசி மீன் வலைகளில் சிக்குகிறது. அந்த, மீனின் உடல் முழுவதும் கூர்மையான முள் இருப்பதால் வலைகளை அறுத்து சேதப்படுத்துகிறது. இந்த, வகை மீன் உணவுக்கும், பூமி உரத்திற்கும் மற்றும் கோழிகளுக்கு போடுவதற்கும் பயன்படாது’ என்றனர்.

The post மாமல்லபுரத்தில் மீனவர்கள் வலையில் சிக்கும் பலாசி மீன்கள்: எதற்கும் பயன்படாது என மீனவர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு வரும்...