×

பல்வேறு மாநிலங்களில் நேற்றிரவு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து: தீயணைப்புத்துறையினர் தகவல்

குஜராத்: பல்வேறு மாநிலங்களில் நேற்றிரவு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். இதனிடையே, பட்டாசு வெடிக்கும்போது பல்வேறு இடங்களில் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 2 துணிக்கடைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் துணி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தன. இமாச்சலப்பிரதேசத்தின் ஹமிர்பூரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயணன் பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி சதர் பஜார் பகுதியில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. டெல்லி கைலாஷ் பகுதியில் வீடு ஒன்றில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

மும்பை குர்லாவில் வங்கிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் நவ்சாரியில் உள்ள கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்தில் ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள கிடங்கில் பிடித்த தீயை பலமணி எந்ந்ரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாப்பத்தில் மார்க்கெட் பகுதியில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததாலும் வேறு சில காரணங்களாலும் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பல்வேறு மாநிலங்களில் நேற்றிரவு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து: தீயணைப்புத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Diwali ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில்...