×

இஎம்ஐ கேட்டு மிரட்டியதால் பைக்கை தீ வைத்து எரிப்பு: நிதி நிறுவன ஊழியர்கள் கண் முன் பரபரப்பு

திருமலை: இஎம்ஐ கட்டாவிட்டால் பைக்கை எடுத்து சென்றுவிடுவோம் என்று மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள் கண்முன்னே வாலிபர் அந்த பைக்கிற்கு தீ வைத்து எரித்தார். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டையில் தங்கியுள்ள இளைஞர் ஒருவர் இஎம்ஐ மூலம் பைக் வாங்கினார். மாதந்தோறும் சரியாக இஎம்ஐ செலுத்தி வந்தாராம். ஆனால், இந்த மாதம் சில காரணங்களால் இஎம்ஐ செலுத்த முடியவில்லை. இதனால் நிதி நிறுவன ஏஜென்ட்களிடம் இருந்து போன் மூலம் தொடர்ந்து பணத்தை கட்டுமாறு கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர் பணம் செலுத்த சிறிது நாள் அவகாசம் தருமாறு கேட்டார். ஆனால் நிதி நிறுவனத்தின் முகவர்கள் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில் நேற்று அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள், உடனடியாக இஎம்ஐ தொகையை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் பைக்கை எடுத்து சென்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களிடம் நீண்ட நேரம் சமாதானம் செய்தும் அவர்கள் கேட்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நிதி நிறுவன முகவர்கள் கண்ணெதிரே பைக்கிற்கு தீ வைத்துள்ளார். இதில் பைக் முற்றிலும் எரிந்து கருகியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் நிதி நிறுவனத்தின் முகவர்கள் அளித்த புகார்களின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post இஎம்ஐ கேட்டு மிரட்டியதால் பைக்கை தீ வைத்து எரிப்பு: நிதி நிறுவன ஊழியர்கள் கண் முன் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,EMI ,Shivambettai, Medak district, Telangana ,
× RELATED ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக...