×

கரூர் குளித்தலை அருகே 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது..!!

கரூர்: கரூர் குளித்தலை அருகே சவாரிமேடு பகுதியில் 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா, இவருக்கு வயது 16. தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது ஒரு வருடமாக வீட்டில் இருந்து விவசாயக் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

அவ்வாறு செல்லும்போது இவரது வீட்டின் அருகே வசிக்கும் நங்கவரம் பேரூராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் செல்லாண்டி என்கிற குணசேகர் மகன் கஜேந்திரன் (16) ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடம் ஆக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரின் காதல் விவகாரம் கஜேந்திரன் வீட்டிற்கு தெரிய வரவே அவரது குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கஜேந்திரன் குடும்பத்தினர் தேவிகாவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மே 24ஆம் தேதி தேவிகாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் தெரியாததால் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்நிலையில் தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள விவசாய கிணற்றில் இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முசிறி தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் சடலமாக மிதந்த தேவிகாவின் உடலை வீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவிகாவின் இறப்பிற்கு திமுக கவுன்சிலர் செல்லாண்டி என்கிற குணசேகர் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்றும், தேவிகாவை அவர்கள் வரவழைத்து அவரைக் கொன்று கிணற்றில் வீசி உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டுமென தேவிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேவிகாவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ,
நங்கவரம் பேரூராட்சி கவுன்சிலர் குணசேகரன் (53), அவரது மகன் கஜேந்திரன்(18) உறவினர் முத்தையன் (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து 3 போரையும் போலீசார் கைது செய்தனர்.

The post கரூர் குளித்தலை அருகே 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Karur bathe Karur ,Karur bathe ,Karur Bathtul ,
× RELATED கரூர் குளித்தலை அருகே பகவதி அம்மன்...