×

வெந்தயக்கீரை சாம்பார்

தேவையானவை:

வெந்தயக்கீரை – ½ கப்,
வேகவைத்த துவரம் பருப்பு – ½ கப்,
சின்ன வெங்காயம் – ¼ கப்,
புளி – எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 4 ஸ்பூன்,
உப்பு – திட்டமாக.

அரைத்துவிட:

தனியா – 1 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயபொடி – ¼ ஸ்பூன்,
துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் – 2 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – 6.

செய்முறை:

முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைக்க வேண்டியவற்றை வறுத்து தனியே வைக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், வெந்தயக் கீரையை நன்கு வதக்கவும். அதில் புளி கரைத்து, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும். கீரை வெந்ததும் பருப்பு மற்றும் வறுத்தவற்றை அரைத்து சேர்த்து குழம்பு கெட்டியானதும் இறக்கி வைத்து தாளிக்கவும்.

 

The post வெந்தயக்கீரை சாம்பார் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சோயா பீன்ஸ் பிரை