×

எர்ணாகுளம் அருகே சாலை நடுவே கஞ்சா செடி: கலால்துறையினர் அதிர்ச்சி


திருவனந்தபுரம்: கேரளாவில் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா மெட்ரோ ரயில் பாலத்தின் கீழ் பகுதியில் சாலை செல்கிறது. இங்கு மெட்ரோ ரயில் பாலத்தை தாங்குவதற்காக கட்டப்பட்ட ராட்சத தூண்களையொட்டி டிவைடரில் புற்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எர்ணாகுளம் கலால்துறை இன்ஸ்பெக்டர் அபிதாஸ் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு மெட்ரோ ரயில் தூணின் அடியில் புற்களுக்கு இடையே கஞ்சா செடி 63 செமீ உயரம் வளர்ந்திருந்தது. இதை பிடுங்கி கைப்பற்றிய அதிகாரிகள் அதனை வளர்த்தது யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

The post எர்ணாகுளம் அருகே சாலை நடுவே கஞ்சா செடி: கலால்துறையினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Excise ,Thiruvananthapuram ,Aluva Metro Rail Bridge ,Kerala ,Metro Rail Bridge… ,Dinakaran ,
× RELATED பலூனில் காஸ் நிரப்பும் போது மைசூரு...