×

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் படலத்தை 75 படகுகள் மூலம் அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரம்..!!

சென்னை: எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடைபெறுகிறது. மிக்ஜாம் புயலின் போது சென்னை அருகே உள்ள CPCL ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்தது. வெள்ளம் தேங்கிய பகுதிகளில் கச்சா எண்ணெய்யும் கலந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

கொற்றலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள் நெட்டுக்குப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது. கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ததில் கொற்றலை ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கச்சா எண்ணெய் பரவி இருப்பது தெரியவந்தது. கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் கடலோர காவல் படையும் நிலப்பகுதிகளில் படிந்த எண்ணெய்யை மாநில அரசும் அகற்றி வருகிறது. இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி சுற்றுச்சூழல்துறை இயக்குநர் தீபக் தலைமையில் பணி நடைபெற்று வருகிறது. எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்திருந்த கச்சா எண்ணெய் இதுவரை 80-க்கும் மேற்பட்ட பேரல்களில் அகற்றபட்டுள்ளது.

இந்நிலையில், எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடைபெறுகிறது. 75 படகுகள் மூலம் கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று 50 படகுகள் மூலம் எண்ணெய் படலாத்தை அகற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று 75 படகுகள் மூலம் பணி தீவிரமடைந்துள்ளது. நெட்டுக்குப்பத்தில் கொற்றலை ஆற்றில் படிந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் படலத்தை 75 படகுகள் மூலம் அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Ennore estuary ,CHENNAI ,Migjam Storm ,Ennore ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயலால்...