×

பொறியியல் சார்நிலை பணிக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு(கொள்குறி வகை) வருகிற 27ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு(ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு முகப்பு பக்கம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பொறியியல் சார்நிலை பணிக்கு ஹால்டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,DNBSC ,Tamil Nadu Government Examination Nadu ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...