×

அமலாக்கத்துறையின் 4வது சம்மனையும் புறக்கணித்த கெஜ்ரிவால்: இம்முறையும் ஆஜராக மறுப்பு

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்ட்டது. இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வரும் கலால்துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியா, கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது. இரண்டு பேரும் சிறையில் உள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் 18ம் தேதி(நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு 4வது முறையாக சம்மன் அனுப்பியது. நேற்றும் கெஜ்ரிவா் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லவில்லை.

The post அமலாக்கத்துறையின் 4வது சம்மனையும் புறக்கணித்த கெஜ்ரிவால்: இம்முறையும் ஆஜராக மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Department of Enforcement ,New Delhi ,Delhi government ,Manish Sisodia ,minister ,Sanjay Singh ,Enforcement Department ,
× RELATED சிறையில் இருந்து வெளியே வந்தார்...