×

லிப்டில் சிக்கி ஊழியர் பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தை சேர்ந்தவர் சோழவேந்தன் (45). சோழவேந்தன் மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள தனியார் சில்வர் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று அவர் முதல் தளத்தில் இருந்து லிப்டில் பொருட்களை ஏற்றியபோது லிப்டை தாங்கி பிடிக்கும் ரோப் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில் சோழவேந்தன் லிப்டின் இடையில் சிக்கிக் கொண்டார். மற்ற ஊழியர்கள் அவரை போராடி மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post லிப்டில் சிக்கி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Cholaventhan ,Thirumangalam ,Cholavendan Mayiladuthurai Mahadana Street ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...