×

மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டினால் ஆபத்து

சிவகங்கை, ஆக.29: மழை பெய்யும் போது கால்நடைகளை மின் கம்பங்களில் கட்டி வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையின் போது இடி, மின்னல் அதிகம் உள்ளது. இவ்வாறான நேரத்தின் போது கால்நடைகளை வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக பராமரித்திட வேண்டும்.

மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்களில் கால்நடைகளை கட்டுதல், மின் மாற்றிகள் அருகில் கால்நடைகள் செல்வதோ, பழைய கட்டிடங்களுக்கு அடியில், கால்நடைகளை கட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். எந்தவொரு அவசர கால தேவைகளை சமாளிக்கவும், கால்நடை நிலையங்களில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான கால்நடை மருந்துகள் இருப்பில் உள்ளது. கால்நடைகளுக்கு பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகிடவும், அவசர சிகிச்சைக்கு நடமாடும் அவசர சிகிச்சை ஊர்தியின்(கால்நடை ஆம்புலன்ஸ்) இலவச எண் 1962 அழைக்கவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டினால் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்...