×

நாட்டின் மின்நுகர்வு 847 கோடி யூனிட்

புதுடெல்லி: ஒன்றிய மின்சார துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2023-24ம் நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் நாட்டின் மின்நுகர்வு 847 கோடி யூனிட்டாக 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2022-23ம் நிதியாண்டின் இதே கால கட்டத்தில் 786 கோடி யூனிட்டாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த 6 மாதங்களில் அதிகபட்ச மின்சார பயன்பாடாக 241 ஜிகா வாட் பதிவாகி உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 215.88 ஜிகா வாட்டாக பதிவானது. கடந்த ஜூன் மாதம் 224.1 ஜிகா வாட் ஆக இருந்த மின் தேவையின் அளவு ஜூலையில் 209.03 ஜிகா வாட்டாக குறைந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 239.19 ஜிகா வாட்டாகவும் செப்டம்பரில் 240 ஜிகா வாட்டாக அதிகரித்தது என்று ஒன்றிய மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

The post நாட்டின் மின்நுகர்வு 847 கோடி யூனிட் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Electricity Department ,Dinakaran ,
× RELATED வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்ட...