×

தமிழ்நாட்டில் உள்ள மின்சார வாகன தயாரிப்பு சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கான புதிய தளம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின்சார வாகனங்கள் மற்றும் வாகன தயாரிப்பு சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கான புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு அரசின் கூறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலம் மின்சார வாகனங்கள் மற்றும் வாகன தயாரிப்பு சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கான புதிய தளம் தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது போஷ் மற்றும் மகேந்திரா நிறுவனங்களுடன் ஸ்டாடப் நிறுவனங்கள் மற்றும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்கும் வல்லுனர்களையும், தொழில் முனைவோர்களையும் ஒரே தலத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் மின் வாகனம், ஆட்டோ மேட்டிவ், ஸ்மார்ட் மொபிலிட்டி ஆகிய துறைகளுக்கான ஒருங்கிணைந்த தளம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டில் மின்சார வாகன தயாரிப்பு துறையில் முன்னிலை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் தேவையான ஆதரவை தமிழ்நாடு த்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் வழங்கும் என்றும் கூறினர்.

The post தமிழ்நாட்டில் உள்ள மின்சார வாகன தயாரிப்பு சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கான புதிய தளம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டம்!