×

தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; வலுவான பிரச்சாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலிக்கூத்தாகிவிடும்: ஐகோர்ட் கிளை கருத்து

சென்னை: 2014-ல் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிக்க வந்தபோது ஏற்பட்ட வன்முறையால் சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தஞ்சை மல்லிப்பட்டினத்திற்கு 2014-ல் பாஜகவின் கருப்பு முருகானந்தம் வாக்கு சேகரிக்க வந்தபோது வன்முறை ஏற்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; வலுவான பிரச்சாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலிக்கூத்தாகிவிடும் என நீதிபதி தெரிவித்தார்.

The post தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; வலுவான பிரச்சாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலிக்கூத்தாகிவிடும்: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajaka ,iCourt Branch ,
× RELATED கொலை வழக்கில் ஜாமீன் கோரி...