×
Saravana Stores

தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்: பிரபல பொருளாதார நிபுணர் அமர்தியா சென் பேட்டி

கொல்கத்தா: தேர்தல் பத்திரங்கள் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் இந்த திட்டத்தை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் நகரில் இருந்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்,‘‘தேர்தல் பத்திர திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும். இப்போது அவை கைவிடப்பட்டதால் நான் பெருமை அடைகிறேன். இதனால், தேர்தல் நேரத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் ஆதரவு விஷயத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

இந்தியாவில் உள்ள தேர்தல் முறை கட்சி அரசியலின் தன்மையால் மிகவும் பாதிக்கப்படுகிறது. சுதந்திரமான தேர்தல் அமைப்பு வேண்டும் என நாம் விரும்புகிறோம். இந்திய அரசியல் சட்டம் அனைத்து மக்களுக்கும் அரசியல் சுதந்திரம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது’’ என்றார்.

The post தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்: பிரபல பொருளாதார நிபுணர் அமர்தியா சென் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Amartya Sen ,KOLKATA ,Supreme Court ,PTI ,Massachusetts, USA ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...