×

6 மாநில உள்துறை செயலாளர்கள் மாற்றம்: மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நடவடிக்கை

டெல்லி: உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலாளர்களை மேற்குவங்க டிஜிபியையும் பணியிட மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து நாள் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேசம், குஜராத், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதே போல மிசோரம் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் அரசு நிர்வாகத்துறை செயலாளர்களையும் தேர்தல் ஆணையம் பணியிட மற்றம் செய்துள்ளது. இந்த வரிசையில் மேற்கு வங்க டிஜிபி ராஜீவ்குமாரையும் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் பாஜக கைப்பற்றி வருவதாக விமர்சித்துள்ளது. இதேபோல மும்பை மாநகராட்சியின் ஆணையர், கூடுதல் இணை ஆணையர்களையும் தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம் முதல் முறையாக இத்தகைய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 6 மாநில உள்துறை செயலாளர்கள் மாற்றம்: மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட...