×

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணி: மரங்களை வெட்டுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள 600மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவற்றில் 200 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஞாயிறு மதியம் சென்னை ஈ.வே.ரா சாலையில் நடத்தப்பட்டது. தெற்கு இரயில்வே நிறுவனத்தின் பசுமை அழிப்பு நடவடிக்கையை கண்டித்து, ‘இனி வெட்டப்படவிருக்கும் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நடுதல் ஆகிய மாற்று வழிகளில் சாத்தியமானவற்றை ரயில்வேதுறை செயல்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியது. இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் இது தொடர்பாப தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது . அதில், “அடுத்த 60 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறு வடிவமைப்பு செய்யும் பணியை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. தெற்கு ரயில்வே சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அமைப்பாகும். ரயில்வே வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள மரங்கள் தான் அதற்கு சாட்சி என்றும் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று பசுமை தாயகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு முறையீடு செய்தார். பொதுநல வழக்கு தொடர இருப்பதாகவும், அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா அமர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. ரயில்க நிலையம் விரிவாக்க பணிக்காக 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணி: மரங்களை வெட்டுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Egmore ,ICourt ,Chennai ,Chennai High Court ,Chennai Egmore railway station ,Egmore Railway Station ,High Court ,Dinakaran ,
× RELATED எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்...