×

ஈரானில் லாரி மீது பஸ் மோதியதில் 11 பேர் பலி

டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரானின் குர்திஷ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சனான்டஜ் பகுதியில் பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தார் லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து மற்றும் லாரி ஆகியவை தீப்பற்றி எரிந்தன.

இந்த விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உலக அளவில் விபத்துக்களின் சராசரியை விட ஈரானில் 20 மடங்கு அதிகம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1...