×

துவரம் பருப்பு தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி – 1 கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
உப்பு – தேவையான அளவு,
பச்சைமிளகாய் – 2,
தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டவும். பின் அதில் நறுக்கிய பச்சைமிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி, உடனே மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி,வெந்ததும் திருப்பிவிட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இதற்கு குருமாசுவை கொடுக்கும்.குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய்க்கு பதில் 6 காய்ந்த மிளகாய்களை அரைத்துப்போடலாம்.

The post துவரம் பருப்பு தோசை appeared first on Dinakaran.

Tags :
× RELATED விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்