×

துலீப் கோப்பை கிரிக்கெட் வடக்கு, மேற்கு மண்டலங்கள் முன்னிலை

பெங்களூர்: பெங்களூரில், துலீப் கோப்பை 2வது அரையிறுதியில் தென் மண்டலம், வடக்கு மண்டல அணிகள் மோதுகின்றன. முதல் நாள் ஆட்டத்தில் வடக்கு மண்டலம் 58.3ஓவரில் முதல் இன்னிங்சில் 198ரன்னுக்கு சுருண்டது. அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் மண்டலம் அணி பல்தேஜ் சிங்கின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அதனால் தென் மண்டலம் முதல் நாள் ஆட்ட நேரடி முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 63ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த மயாங்க் அகர்வால் 37, திலக் வர்மா 12ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். ஆனால் வெளிச்சன்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் தாமதமாக தொடங்கியது.

களத்தில் இருந்த மயாங்க், திலக் இருவரும் 5வது விக்கெட்டுக்கு 110ரன் விளாசினர். இருவரும் முறையே 76, 48ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு தமிழக வீரர்கள் சாய்கிஷோர் 21, வாஷிங்டன் 12 ரன் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் பெவிலியன் திரும்ப தென் மண்டலம் முதல்இன்னிங்சில் 54.4ஓவருக்கு 195ரன்னில் ஆட்டமிழந்தது. வடக்கு மண்டலத்தின் வைபவ், ஜெயந்த் தலா 3, பல்தேஜ், ஹர்ஷித் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 3 ரன் முன்னிலையுடன் வடக்கு மண்டலம் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் வடக்கு மண்டலம் 11 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 51ரன் எடுத்திருந்தது.

கிழக்கு-மத்திய மண்டலங்கள்: துலீப் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டம் கிழக்கு, மத்திய மண்டலங்களுக்கு இடையே பெங்களூர் அருகில் உள்ள ஆலூரில் நடக்கிறது. அந்த ஆட்டமும் வெளிச்சமின்மை, மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இந்த இரண்டுக்கும் இடையில் 2வது நாளான நேற்று மேற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 220ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து களமிறங்கிய மத்திய மண்டலம் 128ரன்னில் சுருண்டது. அதனையடுத்து 92 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம் 2வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 129ரன் எடுத்திருந்தது. புஜாரா 50, சர்பரஸ்கான் 6ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

The post துலீப் கோப்பை கிரிக்கெட் வடக்கு, மேற்கு மண்டலங்கள் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Duleep Cup Cricket North ,West Zones ,BANGALORE ,South Zone ,North Zone ,Duleep Cup ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர்...