×

போதை தடுப்பு விழிப்புணர்வு விவசாய நிலங்களில் காலி மதுபாட்டில்கள் அகற்றம்-தென்காசி போலீசாருக்கு பாராட்டு

தென்காசி : தென்காசி போலீசார் இளைஞர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவசாய நிலங்களில் கிடந்த காலி மது பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.
தென்காசி மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை வீசி சென்று விடுகின்றனர். இதனால் விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் விவசாயிகளுக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுவதாக பரவலாக காவல்துறைக்கு புகார் வந்தது.

இதனைத்தொடர்ந்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தென்காசி கீழப்புலியூர் பகுதி விவசாய நிலத்தில் உள்ள மது பாட்டில்களை அப்புறப்படுத்தினர். இதில் சுமார் 300 பாட்டில்களை அப்புறப்படுத்தினர். மேலும் இளைஞர்களுக்கு போதைக்கு பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும் விவசாய நிலங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். தென்காசி காவல்துறையின் இத்தகைய சமூக அக்கறையை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டினர்.

The post போதை தடுப்பு விழிப்புணர்வு விவசாய நிலங்களில் காலி மதுபாட்டில்கள் அகற்றம்-தென்காசி போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tenkasi Police ,Tenkasi ,
× RELATED தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை