×

பசு கோமியத்தை குடித்தால் மனித உடலுக்கு ஆபத்து: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

புதுடெல்லி: பசுவின் கோமியத்தை குடித்தால் மனித உடலுக்கு ஆபத்து என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பசு மாட்டின் கோமியம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் துணை மருந்தாகவும், அரு மருந்தாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் உயர்ந்த விலங்கு ஆராய்ச்சி அமைப்பான இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐவிஆர்ஐ) போஜ் ராஜ் சிங் தலைமையில் ஒரு ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: பசு கோமியம் மனிதர்களுக்கு தகுதியற்றது.

சில பாக்டீரியாக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஆரோக்கியமான பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு பசுக்களை விட மிக உயர்ந்தது. பசு, எருமைகள் மற்றும் மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளின் பகுப்பாய்வில், எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை பசுக்களை விட மிக உயர்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பசு கோமியத்தை குடித்தால் மனித உடலுக்கு ஆபத்து: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Veterinary Research Institute ,New Delhi ,Veterinary Research Institute of India ,Dinakaran ,
× RELATED வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு:...