×

லட்சிய கனவு காணுங்கள் என இளைஞர்களின் உந்துசக்தியாக இருந்தவர் அப்துல்கலாம் : அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி!

சென்னை : இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அப்துல்கலாமின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அத்துடன் நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் : இந்திய நாட்டின் தென்கோடியில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய தொழில்நுட்ப அறிவால் வளர்ச்சியடைந்து, வளமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவரும், இந்திய குடியரசத் தலைவர் பதவியை வகித்தவருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் #APJAbdulKalam அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது நினைவு நாளான இன்று “கனவு, கனவு, கனவு, இதனை சிந்தனை வடிவமாக்குங்கள், பின் செயலாற்ற முனைப்படுங்கள்” என்ற அவரது அறிவுரையை பின்பற்ற உறுதி ஏற்போம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : லட்சிய கனவு காணுங்கள் என இளைஞர்களின் உந்துசக்தியாக இருந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. எளிய குடும்ப பின்னணியில் பிறந்து கல்வியால் படிப்படியாக முன்னேறி இலக்கை எட்டிப்பிடித்து தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் முன்னுதாரணமாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அப்துல்கலாம் அவர்கள். நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் பதவி வகித்த போதிலும் ஒரு எளிய மனிதரைப் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாட்டு மக்களிடம் பேரன்பு கொண்டிருந்தவர். கல்வி, விஞ்ஞானம், வான்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா மேலும் பல சாதனைகளை எட்ட மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

The post லட்சிய கனவு காணுங்கள் என இளைஞர்களின் உந்துசக்தியாக இருந்தவர் அப்துல்கலாம் : அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி! appeared first on Dinakaran.

Tags : Abdul Kalam ,Chennai ,president ,Dr. ,APJ Abdul Kalam ,
× RELATED பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது