×

இம்ரான் கானுக்கு எதிரான தோஷகானா வழக்கை ஏற்க முடியாது: இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான தோஷகானா வழக்கை ஏற்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது வௌிநாட்டு தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பாதுகாத்து வரும் பாகிஸ்தான் அரசு கரூவூலமான தோஷகானாவிடமிருந்து, குறைந்த விலைக்கு பரிசுப் பொருட்களை வாங்கி, சட்டவிரோதமாக விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமீர் பரூக் நேற்று அளித்த தீர்ப்பில், இம்ரான் மீதான தோஷகானா வழக்கை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கும் கிடைத்த வெற்றி என இம்ரான் கானின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

The post இம்ரான் கானுக்கு எதிரான தோஷகானா வழக்கை ஏற்க முடியாது: இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Doshakhana ,Imran Khan ,Islamabad High Court ,Islamabad ,Pakistan ,Imran Khan.… ,Dinakaran ,
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...