×

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 காலியிடங்கள் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

சென்னை: டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் 4.5 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நான்காம் தொகுதி பணிகள் ஆகும். இந்த காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு 50,000 நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 காலியிடங்கள் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : TNPSC Group ,BAMA ,President ,Chennai ,Anbumani ,TNPSC ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முழு மாதிரி தேர்வு