×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை வெளியீடு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 18ம் தேதி இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தேமுதிக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; அவரின் அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை அறிக்கையில் கூறியதாவது,

‘விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : DMD ,Vijayakanth ,CHENNAI ,president ,Dinakaran ,
× RELATED அரசுக்கு பிரேமலதா கோரிக்கை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்