×

திமுக இளைஞரணி மாநாடு; வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில்; கழக இளைஞர் அணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம்.

நம் இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்காக இரவு – பகல் பாராது அயராது உழைத்த சேலம் மாவட்ட கழகங்களைச் சேர்ந்த மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – கிளை நிர்வாகிகளுக்கு அவர்களின் பணிகளை போற்றி அங்கீகரிக்கும் விதமாக கணையாழி அணிவித்து மகிழ்ந்தோம். கழக வெற்றிக்காக தொடர்ந்து கரம் கோர்த்து உழைப்போம். இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post திமுக இளைஞரணி மாநாடு; வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : DIMUKA YOUTH ,MINISTER ,STALIN ,Chennai ,Dimuka Youth Conference ,Udayanidhi ,Minister Assistant ,Club Youth Team Conference ,Dinakaran ,
× RELATED மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி...