×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் வக்பு சட்ட திருத்த மசோதா, கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, பஞ்சாப் கோர்ட்டுகள் திருத்த மசோதா, கடல்சார் கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்பட 15 மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ள மசோதாக்கள் ஆகும்.

இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணையில் இருக்கும் வக்பு வாரிய சட்டத்திருத்தம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற மசோதாக்கள் முன் வைக்கப்பட்டால் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவும் தி.மு.க. எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Under Stalin ,Dimuka M. B. ,Chennai ,K. Under Stalin ,Dimuka M. B. People ,Dinakaran ,
× RELATED பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான...